தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
சட்டமன்ற தேர்தல் 2026: தேர்தல் நடத்தை விதி அமல் – குண்டடம் பகுதியில் தலைவர்கள் பெயர் பலகைகள் அகற்றம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டத்தில், வருகிற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ருத்ராவதி பேரூராட்சியிலும் மற்றும் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த பலகைகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அதிகாலை முதலே பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் களத்தில் இறங்கி, பல்வேறு இடங்களில் இருந்த தலைவர்கள் பெயர் பலகைகள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படும் வகையில் குண்டடம் ஒன்றியத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.