தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபிக்கு சேவை திலகம் விருதை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வழங்கினார்.

கோவையில் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் எனும் அமைப்பின் தலைவரான முகம்மது ரஃபி,, கடந்த கொரோனா கால நேரங்களில் எந்த வேறுபாடும் இன்றி ஏழைத் தொழிலாளர்கள் முதியவர்கள்,, ஆதரவற்றோர்கள், என அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கி தமிழக அளவில் அனைவரையும் கவனத்தையும் குறிப்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில்,பொங்கல்,கிறிஸ்துமஸ், தீபாவளி என சமய வேறிபாடுகளின்றி பண்டிகைளை கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கி,தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.மேலும் போதை பொருள் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறும்படம் வாயிலாகவும்,நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்..
இந்நிலையில் இவரது சேவையை பாராட்டும் விதமாக கோவை பேரூர் ஆதினம் சார்பாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபிக்கு சேவை திலகம் விருது வழங்கப்பட்டுள்ளது.பேரூர் ஆதினம் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் முகம்மது ரபிக்கு சேவை திலகம் விருதை வழங்கி கவுரவித்தார்..இஸ்லாமியரான முகம்மது ரபிக்கு அடிகளார் வழங்கிய விருது இந்திய நாட்டின் குறிப்பாக தமிழகத்தில் மத நல்லிணக்க ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *