கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலகாலமாக நடைபெறுகிறது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் எள் மருந்து சாற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழா போல காலமாக நடைபெற உள்ளது இதனை யொட்டி இன்று திங்கட்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வருகிறது
காலை 9 மணிக்கு அனுஞ்ஞ தேவதா பிரார்த்தனை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி மிருத்சங்கிரஹணம் அங்குரார் பணம் கும்ப அலங்காரம் பூர்ணாஹீதி ஆகிய ஹோமங்களுடன் தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றன நாளை செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தனை மருந்து சாற்றுதல் மஹா பூர்ணாஹீதி தீபராதனை காட்டப்பட்டு மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் மஹா பூர்ணாஹீதி தீபாரதனை காட்டப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற உள்ளது நாளை மறுநாள் புதன்கிழமை காலை 7 மணிக்கு பிம்பசுத்தி தத்வார்ச்சனை ஸ்பர்சாஹீதி விமான மற்றும் மூலவருக்கு மூர்த்திகளுக்கு திருப்புட நன்னீராட்டு பெருவிழா மஹா தீபாரதனை காட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்று அருட்பிரசாதம் வழங்கப்பட உள்ளது இந்த கும்பாபிஷேகத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கேவிபி முருகேசன் கே ஆர் ஜெய பாண்டியன் உமாராணி மனோகரன் காஞ்சிவனம் உபயதாரர்கள் விருத்தாச்சலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை தலைவர் அ. சங்கரன் கௌரவத் தலைவர் ப. நாராயணசாமி மதுரை என். முத்திஸ்வரன் சுபா தம்பதியினர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி ஜெயதேவி மதுரை இந்து சமய அறநிலையத்துறை மண்டல துணை தலைமை தணிக்கை அலுவலர் பா. ராஜேந்திரன் கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி. துர்கா தேவி தேனி சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கா கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தக்கார் அ. நதியா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி சாமாண்டிபுரம் ஆங்கூர்பாளையம் மற்றும் கம்பம் புறநகர் பகுதிகள் முழுவதும் வீடுகளில் தோரணங்கள் கட்டியும் வண்ண வண்ண கோலங்கள் இட்டு கும்பாபிஷேக விழா சிறக்க வேண்டி இருப்பதால் இந்த பகுதி முழுவதம் கிராமம் மற்றும் நகரம் எங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது.