தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் தலைமையில் பண்ணை புரம் டி.சிந்தலைச்சேரி கோம்பை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அண்ணா திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி. குமரன் பண்ணைப்புரம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜான் பிரிட்டோ உள்பட உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் பண்ணைப் புரம் கோம்பை பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.