தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஷீலா நவரோஸ் தலைமை வகித்தார் உதவி பேராசிரியர் ஜெனிபர் முன்னிலை வகித்தார் ஜெபா எபனேசர் வரவேற்றார் மாவட்ட சுகாதார கல்வியாளர் மாரிமுத்து சாமி மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் காசநோயின் அறிகுறிகள் அதன் சிகிக்சை முறைகள் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
தொடர்ந்து மாணவ ஆசிரியர்கள் காச நோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நூலகர் ஏஞ்சலின் நன்றி கூறினார் அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.