தேனி மாவட்ட சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் செவ்வாய் கிழமை போடிநாயக்கனூர் கம்பம் பெரியகுளம் ஆண்டிபட்டி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் வினய் பிரதாப் சிங் பீம்சிங் மற்றும் மாவட்ட காவல் பார்வையாளர் சிவப்பிரகாஷ் தேவராஜ் ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் தடையில்லா மின்சார வசதி தேவையான குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையத்தினை தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் தேர்தல் நடத்தும் அலுவலர் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் தேர்தல் நடத்தும் அலுவலர் தனித்துணை ஆட்சியர் கவிதா மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தமபாளையம் வருவாய் வருவாய் கோட்டாட்சியர் சையத் முகைதீன் இப்ராஹிம் தாசில்தார் சுருளி தேர்தல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ஏ. எடிசன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தாசில்தார்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *