C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்தனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்தனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஆகியவை 20 சதவீதம் இருப்புடன், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி 30 சதவீதம் இருப்புடனும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங்களுக்கு 335 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 335 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 363 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும், 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 317 வாக்குச்சாவடி மையங்களுக்கு 380 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 380 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 412 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும் அனுப்பப்படுகிறது.
மேலும், 153-நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடி மையங்களுக்கு 307 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 307 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 333 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும், 154-பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 371 மின்னணு வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள், 371 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 402 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் எனவும், 155-கடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 310 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 335 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும் அனுப்பப்படுகிறது.
மேலும், 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 334 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 334 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 361 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள், 157-புவனகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 365 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 365 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 395 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள், 158-சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 358 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 358 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 387 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும், 159-காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 378 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும் அனுப்பப்படுகிறது.
கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2590 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 3108 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3367 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு பிரித்தனுப்பும் பணி இன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(தேர்தல்) திருநாவுக்கரசு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிஷன்குமார் (சிதம்பரம்), தனலட்சுமி (குறிஞ்சிப்பாடி), சுந்தரராஜன் (கடலூர்), கமலம்(பண்ருட்டி),தமிழ்கனி (திட்டக்குடி), விஷ்ணுப்பிரியா (விருத்தாசலம்), சண்முகவள்ளி (நெய்வேலி), தங்கமணி (புவனகிரி), ராணி (காட்டுமன்னார்கோயில்), அங்கீரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.