செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணமூர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கராஜ் , தலைமை காவலர் பேபி சசிகலா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சோழவரத்தில் தனியார் கம்பெனியில் இருந்து டிரான்ஸ்போர்ட் வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தபோது கணக்கில் வராத பணம் 2 லட்சத்து 12,500 ரூபாயை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் பெருமாள் மற்றும் அருள்ஜோதி ஆகியோரிடம் ஒப்படைத்தனர் .பின்னர் அது கருவூலத்தில் செலுத்தப்பட்டது.