கிறிஸ்தவர்களின் புனித வாரம் துவங்கியது….!!
கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி சாம்பல் புதன் கிழமை முதல் 40 நாள் தவக் காலத்தை தொடங்கி கடைப்பிடித்து வருகிறார்கள். தவக்காலத்தின் இறுதி வாரமாகிய புனித வாரம் குறுத்தோலை ஞாயிறன்று துவங்கியது.
குருத்தோலைஞாயிறு தினத்தை முன்னிட்டு மதுரையில் ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய குருத்தோலை பவனியானது மேலப்பொன்னகரம் ஏ.ஏ ரோடு பகுதியில் நடைபெற்றது. ‘பங்குத்தந்தை ஜோசப் உதவிபங்குத்தந்தை ராஜா சதங்கை இயக்குனர் அருட்தந்தை அலெக்ஸ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் அனைத்து ஆலயங்களிலும் அருகில் உள்ள பகுதிகளிலிருந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பவனியாக ஆலயத்தை வந்தடைந்ததை தொடர்ந்து சிறப்பு திருப்பலி ஆராதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடை பிடிக்கப் படுகிறது. புனித வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை அன்று புனித வியாழன் தடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய தினம் தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் அந்தந்த ஆலயங்களில் உள்ள 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பாதங்களை பங்கு தந்தையர்கள் கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று முதல் புனித வெள்ளி வரை தொடர்ந்து ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன.புனித வெள்ளியன்று இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை வழிபாடும் தொடர்ந்து சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெறுகின்றன அன்று இரவு முதல் அனைத்து ஆலயங்களும் மூடப்படுகின்றன. தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவு உயிர்த்தெழும் ஈஸ்டர் சிறப்பு ஆராதனையோடு கிறிஸ்தவர்கள் தங்கள் தவக்காலத்தை நிறைவு செய்கின்றனர்.