​கோவை மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலய வளாகத்தில், தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மதிப்பிற்குரிய ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்வில், இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி வீரராக நுழைந்ததை நினைவுகூரும் வகையில் பவனி தொடங்கப்பட்டது.

இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான இறைமக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, “ஓசன்னா” கீதங்களைப் பாடியபடி ஆலய வளாகத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிகழ்வில் ஆலயச் செயலாளர் Dr. பிரின்ஸ் அருள்ராஜ், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டலக்குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஞானபிரகாசம் மற்றும் திருச்சபை நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பவனியின் நிறைவாக உலக அமைதிக்காக சிறப்புப் பிரார்த்தனைகளும், நற்கருணை ஆராதனைகளும் பக்திப்பரவசத்துடன் நடைபெற்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *