C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தூய்மை காவலர்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக தூய்மை காவலர்கள் பங்கேற்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் நேற்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிபடுத்திடும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர மற்றும் ஊரக பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கலை நிகழ்ச்சிகள், உறுதிமொழி ஏற்றல் போன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துப்பட்டு வருகின்றன.
அதற்கிணங்க இன்றைய தினம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அண்ணாவிளையாட்ரங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் மற்றும் தேர்தல் நாள் என்ற வடிவமைப்பில் தூய்மை காவலர்கள் மற்றும் அவர்களது வாகனங்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை என்பதை அனைத்து வாக்காளர்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு உறுதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் இசைத்தட்டு வெளியிடப்பட்டது, வெளியிடப்பட்ட இப்பாடல் தொடர்ந்து நடைபெற்றுவரும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படவுள்ளது.
வாக்காளர்கள் ஜனநாயக திருவிழாவான தேர்தல் நாளில் மறவாமல் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைக்கப்பட்டது. இப்பேரணி அண்ணாவிளையாட்டரங்கம் முதல் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் திருமதி.
ரா.அ.பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் திருவிழா, தமிழகத்தின் பெருவிழா