கம்பம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா


தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை தமிழக வெற்றி கழக நிறுவனத் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார் கம்பம் நகரைச் சேர்ந்த மிஸ்ரா அவர்கள் ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்தில் கல்வி கற்றதுடன், தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் பால முத்தழகு குழுமத்தின் சேர்மனாகவும் விளங்கி வருகிறார்.

மேலும் மிஸ்ரா அவர்கள் கடந்த 32 ஆண்டுகளாக தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருவதொடு மட்டுமில்லாமல் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தேமுதிக சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டவர்
இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், அழகுராஜா என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

கல்வி சேவை மருத்துவ சேவைகள், இலவச ஆம்புலன்ஸ் வசதிகள் போன்ற பல சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் ஜெகநாத் மிஸ்ரா, மக்கள் நலனில் ஆழ்ந்த பற்றுடன் செயல்பட்டு வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *