புதுச்சேரி மார்ச் 30.

இவ்விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த அனைவருக்கும் விருதுகள் திருவிழாவில் சிறந்து விளங்கும் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் மெடல் அணிவித்து விருதுச் சான்றிதழ் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் அஷ்ரப்தீன் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் அட்வகேட் மனோகர் அனைவரையும் வரவேற்றார்.

தேசிய துணை தலைவர் தந்தை பிரியன் , தேசிய துணை தலைவர் அப்துல் ரகுமான், மற்றும் தேசிய துணைச் செயலாளர் டாக்டர் பண்டரிநாதன் என்ற அண்ணாதுரை ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார்கள்.

ஆல் இந்தியா பிரஸ் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் விருதுகள் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் , பீப்புள் பாரம் ஆப் இந்தியா தமிழ்நாடு மாநில செயலாளர் அட்வகேட் டாக்டர் வி.எஸ்.முகமது முபாரக் என்ற சலீம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அட்வகேட் டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் மெடல் அணிவித்து விருது சான்றிதழ் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அட்வகேட் ஸ்ரீமன் நாராயணா தேசிய துணைச் செயலாளர் ஆந்திர பிரதேசம்,அட்வகேட் பி .எம்.சுந்தரமூர்த்தி தேசிய சட்ட ஆலோசகர்,கர்நாடக மாநிலம் அட்வகேட் ராதா சவுத்ரி,மாநில துணை செயலாளர்,
அட்வகேட் சப்னம் கவுசர் மத்திய பிரதேச மாநில செயலாளர்,அட்வகேட் வெங்கட்ரமணன் தெலுங்கானா மாநில செயலாளர் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் ஆர்.பி.கமல்ராஜ்,தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் சிவ .மணிகண்டன்,தமிழ்நாடு மாநில செயலாளர் அகமது ரியாஸ், தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் இளையராஜா, தமிழ்நாடு மாநில துணை செயலாளர் ஜி.பி.மார்க்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் விருதுகள் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுச்சேரி மாநில துணைத்தலைவர் ராஜாராம்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டியன், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பி.ஆர்.ஓ ஹரிதாஸ் , புதுச்சேரி மாநில துணைத்தலைவர் வெங்கடேச பெருமாள், புதுச்சேரி மாநில துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *