கரூர் செய்தியாளர் மரியான் பாபு


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்வி மனு தாக்கல்..


தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கட்சியினரும் மனு தாக்கல் செய்ததை முன்னிட்டு இன்று கரூரில் முதல் நாளிலேயே வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முதல் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்ததை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும்,மாவட்ட செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுவதால் தனது வேட்பு மனுவை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கரூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திற்க்கு சென்று கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சின்னசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தாக்கல் செய்த பிறகு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் எம்ஆர். விஜயபாஸ்கருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *