ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் (All India Press & Media People’s Association) எனப்படும் “அகில இந்திய பத்திரிகை மற்றும் ஊடக மக்கள் சங்கம்” சார்பில் விருது வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள கிரீன் பேலஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கு பதக்கங்கள் அணிவித்து, விருது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சங்கத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. அஷ்ரப்தீன் தலைமையில் விழா நடைபெற்றது தேசிய பொதுச் செயலாளர், வழக்குரைஞர் முனைவர் திரு. மனோகர் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியினை வழி நடித்தினார்.

தேசிய துணைத்தலைவர்கள் திரு. தந்தை பிரியன், திரு. அப்துல் ரகுமான் மற்றும் தேசிய துணைச் செயலாளர் முனைவர் பண்டரிநாதன் @ அண்ணாதுரை ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர், வழக்குரைஞர் முனைவர் திரு. சுரேஷ் குமார், பீப்பிள் ஃபோரம் ஆஃப் இந்தியா தமிழ்நாடு மாநில செயலாளர், வழக்குரைஞர் முனைவர் திரு. வி. எஸ். முகமது முபாரக் (சலீம்) மற்றும் பணி நிறைவு பெற்ற நீதிபதி டாக்டர் ஜே. ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

மேலும், நிகழ்ச்சியில் வழக்குரைஞர் திரு. ஸ்ரீமன் நாராயணா, தேசிய துணைச் செயலாளர் (ஆந்திரப் பிரதேசம்), வழக்குரைஞர் திரு. பி. எம். சுந்தரமூர்த்தி, தேசிய சட்ட ஆலோசகர் (கர்நாடகா), வழக்குரைஞர் திரு. ராதா சவுத்ரி, மாநில துணைச் செயலாளர், வழக்குரைஞர் திரு சப்னம் கௌசர், மத்தியப் பிரதேச மாநில செயலாளர், வழக்குரைஞர் திரு. வெங்கட் ரமணன், தமிழ்நாடு மாநில தலைவர், முனைவர் திரு. ஆர். பி. கமல்ராஜ், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் , திரு. சிவ. மணிகண்டன், மாநில செயலாளர், திரு. அகமது ரியாஸ், மாநில துணைத்தலைவர், திரு. இளையராஜா, மாநில துணைச் செயலாளர் திரு. டி. பி. மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில துணைத்தலைவர் திரு. ராஜாராம் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அலெக்ஸ் பாண்டியன், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ஹரிதாஸ், புதுச்சேரி மாநில துணைத்தலைவர் திரு. வெங்கடேச பெருமாள், மாநில துணைச் செயலாளர் திரு. சக்திவேல் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

இவ்விழாவில், புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் விரிவியல் பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் ஆனந்த்குமார் அவர்கள், மாணவர்-மாணவிகளுக்கு களப்பணிகளில் நேரடி பயிற்சிகளை வழங்குவதுடன், விவசாயிகளுடன் இணைந்து செய்முறை அடிப்படையிலான அனுபவக் கற்றலை தொடர்ந்து அயராது முன்னெடுத்து வருவதற்காக ‘சிறந்த கல்வியாளர் விருது’ வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *