காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கேயம் அதிமுக தொகுதி வேட்பாளர் குறித்த விபரம்:

என்.எஸ்.என்.நடராஜ்
பிறப்பு: 1958
கல்வி: பி.ஏ.,
சொந்த ஊர்: நெய்க்காரன்பாளையம், காங்கயம்
மனைவி: சாந்தி
மகன்: தனபால்
மகள்: பிரேமலதா
ஜாதி: கொங்கு வேளாளர்

தற்போதைய கட்சிப் பொறுப்பு: 1972 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இணைந்த இவர், கிளை பிரதிநிதியாகவும், கிளை செயலாளராகவும் பணியாற்றி, 1999 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை காங்கேயம் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

சாதனைகள் மற்றும் பணிகள்: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கேயம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், எம்எல்ஏ., வாக இருந்த காலத்தில் காங்கேயம் தொகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காங்கேயம் தொகுதிக்கு பெற்றுத் தந்துள்ளார். காங்கயம், வெள்ளகோவில் நகரங்களில் உள்ள தீயணைப்புத்துறைக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள், சென்னிமலைக்கு புதிய தீயணைப்புத்துறை, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம், காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகியனவற்றுக்கு புதிய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். மேலும், காவிரி இரண்டாம் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் இவரது பணிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *