C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம்
100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணி மற்றும் ரிட்லி ஆமை பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

கடலூர்,நகர அரங்கம் அருகில். 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்து,குடிநீர் கேன்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பிராதன வாயிலில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் ரிட்லி ஆமை பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து இளம் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல், கையெழுத்து இயக்கம், சுயபுகைப்பட பதாகை, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஆட்டோ வாகனம் மற்றும் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் கேன்களில் ஒட்டப்பட்டது. மேலும் அனைவரும் தனது வாக்கினை பதிவுசெய்து ஜனநாயக கடமையினை நிலைநாட்டிடும் வகையில் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கடலூர், நகர அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர அரங்கில் தொடங்கி முதுநகர் வரை நடைபெற்றது.
100% தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பிராதன வாயிலில் வாக்குப்பதிவினை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிட்லி ஆமை பலூன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் எவ்வித அச்சுறுத்தலின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து
முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *