மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவைத் தொடக்கப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. பேபி எஸ்தர் அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்.

பாரம்பரிய உணவின் அவசியம், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் எடுத்துரைத்தார். பள்ளியின் கல்வியாளர் திரு. ஜெயராமன் அவர்கள் 100% வாக்களிப்பு மற்றும் ஜனநாயகக் கடமை பற்றி எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்கள் பெற்றோரை தவறாமல் வாக்களிக்கச் சொல்வோம் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை பல்வேறு விதங்களில் தயார் செய்து காட்சிப்படுத்தினர் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உணவை ருசி பார்த்து மகிழ்ந்தனர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்-இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பள்ளி ஆசிரியர் திரு.நிசார்அகமது நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *