தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் புது புது முயற்சியில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிந்து எழிலரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

அப்போது தனது குழந்தை மற்றும் ஏர் கலப்பையுடன் மேலே திறக்கப்பட காரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தது காண்போரை வியக்க வைத்தது. 200 மீட்டருக்கு முன்பு கார் நிறுத்தப்பட்ட நிலையில் காரில் இருந்து இறங்கிய சிந்து தங்கள் கட்சி சின்னத்தில் உள்ள ஏர் கலப்பையை கையில் ஏந்தியவாறு 200 மீட்டர் நடந்து வந்து தேர்தல் அலுவலரும் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியருமான பாலாஜியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். குழந்தை மற்றும் ஏர்கலப்பையுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, நான் வெற்றி பெற்றால் திருப்பெரும்புதூர் தொகுதியில் கல்வி, சுகாதாரம் சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *