செய்யூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இராஜசேகர் வேட்புமனு தாக்கல்
கல்பாக்கம் ஏப் 2
2026 ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் செய்யூர் சட்ட மன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளராக பெரும்பாக்கம் இராஜசேகர் போட்டியிடுகிறார்.
செய்யூர் தாலுகா அலுவலகத்தில் அவர் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் அவைத் தலைவர் ம தனபால் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாஜக பிரவின்குமார் பாமக கணபதி ஆகியோர் உள்ளனர்