தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ப.திவ்யா தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிலிக்ஸ் ராஜாவிடம் வேட்பு மனு மனுத்தாக்கல் செய்தார்.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் (101) தனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ப.திவ்யா, வருவாய் கோட்டாட்சியர். அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ பிலிக்ஸ் ராஜாவிடம் உறுதிமொழி ஏற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் முருகன் கோவில், சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் பெண்கள் தாரை, தப்பட்டை ஒலியுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்றனர்.
ப.திவ்யா, நாம் தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். மூலனூர் பகுதியைச் சேர்ந்த இவர், கிழங்குண்டலில் வசித்து வருகிறார். இவரது கணவர் பிரசாந்த், கட்சியின் மூலனூர் ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார்.
2021-சட்டமன்றத் தேர்தலில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதுடன், அப்போதைய வேட்பாளருக்கான தேர்தல் பணிகளிலும் செயல்பட்டுள்ளார். மூலனூர் பகுதியில் மரக்கன்றுகள் நடுதல், பனை விதை விதைத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
மேலும், மூலனூர் அருகிலுள்ள நல்லதங்காள் ஓடைக்கு அமராவதி ஆறு நீரை நிரந்தரமாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களுடன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
மனுத்தாக்கல் நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.