கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி திருக்கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கரூர் சணப்பிரட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.

பின்னர் ஆண்டி கோலத்தில் காட்சி அளித்த முருகனுக்கு பால்,பஞ்சாமிர்தம், சந்தனம்,தேன், இளநீர், திருநீற்று என அனைத்து அபிஷேகமும் செய்து பிறகு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை புரிந்தவர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *