மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை
மூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.பணம், பொருள் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது. “எனது வாக்கு எனது உரிமை” “என் வாக்கு விற்பனைக்கு இல்லை” “வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்”, “பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்”. என்கிற வாசகம் கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகி அசோகன் வரவேற்றார்.
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் க.சி.நீலமேகம் தலைமை வகித்து பேசுகையில்,“யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள், அது, ஊழலுக்கு துணைபோகும் செயல் என்பதுடன், ஊழல் பணத்தில் பங்கு பெறும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு சமமான செயல் ” என எடுத்துரைத்தார்.
மக்கள் சக்தி இயக்க மாநில துணைத் தலைவர் வெ.இரா.சந்திரசேகர், துணைச்செயலாளர் ஆர்.இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலாளர் ஆர்.கே.ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் உட்பட பலர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.