முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளராக
மருத்துவர் ராம்குமார் போட்டி
முதுகுளத்தூர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளராக மருத்துவர் ராம்குமார் போட்டியிடுகின்றனர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் (சசிகலா கட்சி) அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் மருத்துவர் ராம்குமார் போட்டியிடுகின்றனர்.
முதுகுளத்தூர் தாலுகா இளஞ்செம்பூர் கிராமத்தைச்சேர்ந்த ராமபாண்டி என்பவரின் மகன் ராம்குமார் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராம்குமார்( எம்.பி.பி.எஸ்) மருத்துவ படிப்பு படித்துள்ளார்.முதுகுளத்தூரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.இவர் பாரதிய ஜனதா கட்சியில் மாநில மருத்துவ அணி செயலாளராகவும் மாநில இளைஞரணி செயலாளராகவும் பாஜகவின் கட்சி பதிவியில் இருந்தார்.இவரது தாயார் பாஜகவின் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில் ராம்குமார் பாஜகவில் இருந்து விலகி புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் சசிகலா தலைமையின் கீழ் இணைந்தார்.