தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் — 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி” (Special Intensive Revision – SIR)யை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் இ.ல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் மற்றும் நகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே, சர்ச் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 700-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
திமுக சார்பில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் இந்த “SIR” நடவடிக்கை, அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்க வழிவகுக்கும் எனவும், இதனால் சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
திமுக ஏற்கனவே இந்த ‘SIR’ நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 11, 2025) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் நிர்வாகிகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.
தாராபுரம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் பெரும் கவனத்தை ஈர்த்தது. போலீஸ் பாதுகாப்பு வலுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.