திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை நடைபயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற மனிதநேயப் பணியினை பாராட்டி 2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருது வழங்கினார்.

ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப்பணிக்கு உறுதுணையாக இருந்துவரும் அவரது இணையர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் மனிதநேயப்பணியை
திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமி நரசிம்மன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஷேக் தாவூத், பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர்
பாராட்டினர்.


அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு உற்றார், உறவின்றி பெயர், விலாசம் தெரியாமல் இறப்போர் பலர். அவர்கள் பெயர் விலாசம் தெரியாதவராக சரக காவல்துறையினர் தரும் தகவலின் அடிப்படையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வருகிறோம்.


மேலும் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும் அறிவார்ந்த சமூகத்திற்கு இலவச நூலகம் வைத்துள்ளோம்.
தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும். தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பதற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டேன். அவ்வாறு காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.


பாரம்பரியத்தைக் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், 26 முறை குருதி கொடை, மூன்று ஜோடி கண் தானத்தை பெற்றுக் கொடுத்த பணி, வாழ் நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்கு பதிவு செய்தமையையும், உடல்நலம், கவிதை, கட்டுரை நூல்கள் வெளியிட்டமையையும் எடுத்துரைத்தார்.


திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் விருதாளர் விஜயகுமாரைப் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *