கோவை வெள்ளலூர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள “இவிபி வுமன் சென்டர்” (EVP WOMEN CENTER) மருத்துவமனையின் திறப்பு விழாநடைபெற்றது.​

வெள்ளலூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நேதாஜி வீதியில் அமைந்துள்ள இந்த புதிய கிளினிக்கின் திறப்பு விழாவிற்கு மருத்துவத்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.இந்த விழாவில் கே.ஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் மற்றும் ஜே.கே.பி கிளினிக்கின் இதய நோய் நிபுணர் டாக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்து வைத்தனர்.மேலும் வுமன் சென்டர் இயக்குனர் டாக்டர் மிருதுபாஷினி,வி.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் வெங்கடேஷ்,என்.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் மனோகரன், ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் தண்டபாணி மற்றும் (FIMS) இயக்குனர் டாக்டர் சகுந்தலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் திவ்யா பாலசுப்ரமணியம், டாக்டர் நிர்மல் குமார் மற்றும் வெள்ளலூர் முன்னாள் தலைவர் EVP. பாலசுப்ரமணியம் & குடும்பத்தினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.​இப்பகுதியில் உள்ள பெண்களுக்குத் தரமான மற்றும் உலகத்தரம் வாய்ந்த மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவச் சிகிச்சைகளை மிக எளிதாக வழங்குவதே இந்த மையத்தின் நோக்கம் என்று மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையின் வரவு, வெள்ளலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *