கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா

கும்பகோணம் நிருத்யஞ்சலி நடனார்பனா (நடனக் கோயில்) குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.

சலங்கை பூஜையில் மாணவிகள் லக்ஷ்னா,ஜனனியா,தான்யா, அதிதி,ஸ்ரீ வர்ஷா, ஹாசினி, தருணிகா,அபிராமி, மணிகர்னிஹா,பிரியதர்ஷினி,லக்ஷின்யா செல்வகுமார்,
ஆகியோர் பங்கேற்ற பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நடன நிகழ்ச்சிக்கு நாட்டியக் கலை மணி மீனாட்சி சுவாமிநாதனின் நட்டு வாங்கம் ,டாக்டர் ராஜேஸ்வரியின் வாய்ப்பாட்டு,தவில் வித்வான் கலை மாமணி ரெட்டியூர் செல்வத்தின்
மிருதங்கம், சிதம்பரம் ,மனோஜின் வயலின், ஆகியோரின் இசையில் நடந்தது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை,அபிநயாநடனக் கலைக்கூடம் ஞானகுரு டாக்டர் உமா மகேஸ்வரி,கும்பகோணம்,அரசு கவின் கலைக் கல்லூரி – ஓவியத் துறைப் பேராசிரியர் அருளரசன்,அரியலூர் , பால்வளத்துறை பதிவாளர், கார்த்திகேயன், பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவர் புனிதவதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *