முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் ஸ்ரீநாத.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு முத்தையாபுரம் பொட்டல் காடு சவேரியார் புரம் தங்கம்மாள்புரம் பழைய காயல் ஃபுல்லா வெளி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 3000 ஏக்கர் உப்பளத்னத கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஒரு வருட காலமாக எடுக்கப்பட்டு வருகிறது ஒப்பந்தம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் பணி செய்வதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உப்பளத்தை கையகப்படுத்தினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோவளம் பசு வந்தரை பண்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
கடந்த திமுக ஆட்சியின்போது தமிழக முதலமைச்சர் அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் இடமும் கட்சித் தலைவர்களிடமும் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஸ்ரீநாத் சந்தித்து எங்களின் ஒப்பளப் பகுதியை பார்வையிட வரவேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
இதனை அடுத்து அமைச்சர் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்கப்பட உள்ள உப்பளப் பகுதிகளை பார்வையிட வருகை தந்தார் அமைச்சர் ஸ்ரீநாத்தை சங்கத்தின் தலைவர் மந்திரமூர்த்தி. செயலாளர் சேகர். பொருளாளர் பொன்ராஜ். உப தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட உப்பள உற்பத்தியாளர்கள் வரவேற்றனர்.
அதன் பிறகு உப்பல பகுதியை அமைச்சர் ஸ்ரீநாத் பார்வையிட்டார் அப்போது விபரங்களையும் உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தார் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சேகர் அமைச்சர் ஸ்ரீநாத்திடம் இங்கு நூறு வருடங்களுக்கு மேலாக நாங்கள் உப்பு தொழில் செய்து வருகிறோம் இந்த இடம் ஆரம்பத்தில் வெறும் காலியிடமாக தான் இருந்தது நாங்கள் தான் அதனைப் பயன்படுத்தி உப்பளமாக மாற்றி தற்போது தலைமுறை தலைமுறையாக தொழில் செய்து வருகிறோம் இதனை நம்பி 15 ஆயிரம் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றன
ஆனால் அரசிடம் தவறான தகவல்களை அதிகாரிகள் கொடுத்து வருகின்றனர் இங்கு உப்பளம் இருப்பதாக கூறாமல் வெறும் காலி இடமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர் இது முழுவதும் உப்பளம் தான் அது போக மணியாச்சியிலிருந்து காற்றாற்று வெள்ளம் வரும்போது இந்த வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது இந்தப் பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைத்தால் இந்த காற்றாற்று வெள்ளம் வரும்போது ஊருக்குள் வெள்ளம் வந்துவிடும் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயம் உப்பளத்துக்கு பயன்படாத இடங்கள் வேம்பார் பகுதியில் அதிகமாக உள்ளது அந்தப் பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்கலாம் இல்லையென்றால் துறைமுகத்திற்கு உள்ளேயே இடம் உள்ளது
அங்கு அமைக்கலாம் ஆனால் கப்பல் கட்டுதளம் 250 ஏக்கர் எடுத்தால் போதும் ஆனால் 3000 ஏக்கர் எடுப்பது எங்களுக்கு பல்வேறு வகையில் சந்தேகம் உள்ளது சிப்காட் போல தனியாருக்கு இடத்தை எடுத்துக் கொடுப்பதாக தெரிய வருகிறது என்று கூறினார்கள் மேலும் அதிகாரிகள் எங்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் எங்களை பாதுகாக்க வேண்டும் எங்களின் தொழில் வளத்தை அளிக்காமல் எங்களது தொழிலை பாதுகாக்க வேண்டும் அதற்கு நீங்கள் தமிழகம் முதலமைச்சர் சோசப் விஜய் இடம் தெரிவிக்க வேண்டும் என்று உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சேகர் கூறினார்.
அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் கூறுகையில் இந்தப் பகுதியை முழுவதும் நான் நன்றாக பார்த்துவிட்டு முழுமையான ஒரு அறிக்கை தயார் செய்து என்னிடம் தாருங்கள் நான் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முதலமைச்சர்தான் இதில் முடிவெடுக்க முடியும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் நானும் தமிழகம் முதலமைச்சர் இடம் இங்கு உள்ள நிலவரத்தை முழுமையாக தெரிவிக்கிறேன் அதுவரை நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது மீண்டும் உப்பு உற்பத்தியாளர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் எங்களின் தொழிலை அளிக்க வேண்டாம் முந்தைய அரசு செய்த தவறான செயல்களை சுட்டி காட்டினார்கள்.
தொடர்ந்து வருட கணக்கில் கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட்டால் எங்களின் தொழில் அழிந்து விடும் 15000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று போராடி வருகின்ற உட்பு உற்பத்தியாளர்கள் இந்த தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கையுடன் உப்பு உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்
ஆனால் ஒரு புறம் அரசு அதிகாரிகள் பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் உப்பு உற்பத்தியாளர்களை மிரட்டி வரும் அதிகாரிகளை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் ஒப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது