புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு வட்டார காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது. நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பெரியார் நகர், நெல்லித்தோப்பு சிக்னல் பெரியார் சிலை வழியாக ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் எம்.எல்.ஏ.க்கள் வைத்திய நாதன், ரமேஷ்பரம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ் நிர்வாகிகள் பழனி மருதுபாண்டி, திருமுருகன், தனுசு, இளையராஜா, செல்வநாதன், செந்தில்குமார், ராஜ்குமார், முத்துராமன், ஜெகவீரப்பாண்டியன், உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியாக சென்ற ராஜிவ்காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர், அப்போது பா.ஜனதாவிற்கு எதிராக கோஷமிட்டனர்.


இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து போக வலிறுத்தினார். ஆனால் காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கைது செய்து செய்தனர். மறியல் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மீது கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியின் திறமையின்மையால் நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, விலைவாசி அதிக ரித்துள்ளது, இதனை எடுத்து கூறி ராகுல்காந்தி பாதயாத்திர மேற்கொண்டர். மக்கள் அனைத்து பகுதிகளிலும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்திக்கு பெருகி வரும் செல்வாக்கை பார்த்து, அதனை குறைக்க வேண்டும் என பிரதமர் நினைத்தார் அதற்கு நேரம் பார்த்து இருந்தார். மோடியின் பினா மியே அதானி தான் இதனை நாடாளு மன்றத்தில் ராகுல்காந்தி எடுத்துரைத்தார் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஜனநாயக படுகொலை மோடி ஆட்சியை தூக்கி எரியும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *