மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில்ஒன்றாகும்..இக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று ஜெனக நாராயணபெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் இறங்கி எழந்தருளரும் வைபவத்தை முன்னிட்டு . நேற்று அதிகாலை அதிர்வேட்டு முழங்க கோவிலிலிருந்து வெள்ளை குதிரை வாகனத்தில் சுவாமி கள்ளழகர் வேடத்தில் புறப்பட்டு சன்னதிதெரு,46 நம்பர்ரோடு, காவல்நிலையம் ,தீயணைப்பு நிலையம்,தெற்கு ரதவீதி,மேலரதவீதி வழியாக உள்ள மண்டகபடிகளுக்கு சென்று அருள்பாலித்தபின். சனீஸ்வரன் கோவிலில் முன்பு அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.பின்னர் காலை 8.50.மணியளவில்
வட்டபிள்ளையார் கோயில் அருகில் வெள்ளை குதிரை வாகனத்தில் கள்ளழகர் பச்சைபட்டுஉடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அப்போது.பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தனர் செம்பில் சர்க்கரை வைத்து சூடம் ஏந்தி கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டனர் .
நூற்றுக்கும் மேற்பட்டோர்முடி காணிக்கை செலுத்தினார்கள்.பின்னர்ஆற்றின் மேற்கு கரையில் அமைந்திருந்த சத்து முதலியார் மண்டகப்படியில் எழுந்தருளி.பக்தர்களுக்கு காட்சியளியத்தார். டிஎஸ்பி பாலசுந்தரம்,இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருந்தனர்,வழி நெடுக சுவாமியை வரவேற்று அன்னதானம் , பல்வேறு அமைப்புகளில் இருந்து நீர் மோர் வழங்கினார்கள்.
மாலை வைகை ஆற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு பேட்டை, முதலியார்கோட்டை,சங்கங்கோட்டை ஆகிய பகுதி சென்று இரட்டை அக்ரஹாரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக உள்ள மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தார்..
இன்று சனிக்கிழமை இரவு யாதவர்கள் சங்கத்தின் சார்பாக விடிய,விடிய தசாவதாரம் நடைபெறும். நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு சனீஸ்வரன்கோவில் முன்பாக முதலியார் கோட்டை கிராமமக்கள் சார்பாக பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று சுவாமி கோவிலை வந்தடையும்.
விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுதா மற்றும் கோவில் பணியாளர்கள் முரளி.உள்ளிட்டோர். செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *