புதுச்சேரி காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் கறவை மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரப்பர் தரை விரிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரப்பர் தரை விரிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் விக்னேஷ்வரன் (நெடுங்காடு), டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் (நிரவி – திருபட்டினம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *