சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள அகர்சந்த் மாண்முல் செயின் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் ஆங்கில இலக்கிய மொழிக்கான பைசாந்தியம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவக்கவிழாவில் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரிஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அனந்தநாராயணன்

மற்றும் கல்லூரி துணை முதல்வர் ஆங்கில துறை தலைவர் முனைவர் R. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பைசாந்தியம் தலைப்பில் ஆங்கில இலக்கிய கருத்துக்களை சிறப்பாக எடுத்துக் கூறினர் இதில் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் சென்னை தாம்பரம் பெருங்களத்தூர் வேளச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரிஷ் கூறுகையில் மாணவர்களாகிய நீங்களும் நன்றாக படித்து என்னை போல் சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்று மாணவர்களுக்கு இடையே உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *