இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்திடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.04.2022 அன்று ஆணையர் அலுவலக வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்திருந்தார். ஒப்பந்த காலத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடமானது, 3 தளங்களுடன், 33,202 சதுரடி பரப்பளவில், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர்களின் அறைகள், தலைமைப் பொறியாளரின் அறை, இணை ஆணையர்களின் அறைகள், உதவி ஆணையர்களின் அறைகள், திருப்பணி பிரிவு, பொறியியல் பிரிவு, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வரிசை வளாகத்தில் 4 நுழைவு மண்டபங்கள், 4 அவசர கால வழிகள், காத்திருப்பு கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள், கோவில் பயன்பாட்டிற்கான கடைகள், மருத்துவ மையம், கட்டண சீட்டு விற்பனை மையம், பிரசாத விற்பனை நிலையம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமர குருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *