கேஸ்லெஸ் எகானமி என ஆர்வம் காட்டி யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் தொகைக்கு கட்டணம் மற்றும் வரி விதிக்க சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது இதனால் விலைவாசி உயரும் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து உடனடியாக அதனை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏஎம் விக்கிரம ராஜா, வலியுறுத்தியுள்ளார் மேலும் வரும் 12ம் தேதி போண்பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்ட யூபிஐ மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை தவிர்க்க கூறியுள்ளார்.
அதன் படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல தலைவர் டிபிவி வைகுண்டராஜா ஏற்பாட்டில் சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், பொருளாளர் தனபால், செய்தி தொடர்பாளர் ராஜகுமார் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வணிக நிறுவனங்களிலும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது