வலங்கைமான் பகுதியில் கனமழை வளர்ப்பு மீன்களின் விலை கடும் சரிவு, குளங்களில் மீன் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத்துறையக்கு
சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சி களுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

இவை நீங்களாக பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நூறு சதவீதம் மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்பட்டுள்ளது. இவற்றில் கெளுத்தி, ரோகு, கட்லா, சில்வர் கெண்டை, புல் கெண்டை, விரால், மிர்கால் ஆகிய இரகங்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டுவருகிறது.

முன்னதாக மீன் குளத்தை சுலபமாக கையாளும் வகையில் செவ்வக வடிவத்தில் அமைத்துக் கொண்டும் இடவசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றை பொருத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்து மீன் வளர்ப்பு குளங்களை அமைத்துள்ளனர். இந்த மீன் வளர்ப்பு குளங்கள் ஆழம் ஐந்தடி க்கு குறையாமலும், மணற்பாங்கான பகுதிகளில் வண்டல் மண் நிரப்பி உள்ளனர்.

5அடி உயரத்திற்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்தி வைத்து ஒரு மாத வயதுடைய குஞ்சுகளா வாங்கிவிட்டு மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடப்படுகிறது. ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல் இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் மீன் வளர்ப்போர் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்திற்கு முன்பாகவே கூடுதலாக பெய்த நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரால் முன்கூட்டியே குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. ஏப்ரல், மே மாதங்களில் குளங்களில் தண்ணீர் குறைவது வாடிக்கை இருப்பினும் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் கோடையில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் குளங்களில் நீர் அளவு குறையாமலும், சில இடங்களில் குளங்களில் தண்ணீர் அளவு உயர்ந்தது. வழக்கத்தை விட குளங்களில் கூடுதலாக தண்ணீர் இருப்பதால் மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரித்து உள்ளது.

இருப்பினும் மீன்களின் விலை குறைந்துள்ளது. வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கெண்டை மீன் மொத்த விலையாக ரூ. 140முதல் ரூ. 150வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையாக ரூ. 180முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரால் மீன்களை கிலோ ரூ. 300க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி இருப்பதால் ஒப்பந்தம் மற்றும் ஏலத்தில் எடுத்து மீன் வளர்ப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த காலத்தில் மீன்களைப் பிடித்துக் கொண்டு ஒப்படைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. வலங்கைமான் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் குறையாத நீர் நிலைகளை அடுத்து குறைந்து போனது மீன் விலையால் மீன் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *