ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் .இ.பெரியசாமி அவர்கள் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பொதுப்பணிகள் (கட்டிடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றதுதமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை பிரதீப்யாதவ் ஆட்சியர்.தி.சாருஸ்ரீ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியத்தலைவர் உ.மதிவாணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்

ஆய்வுக்கூட்டத்தில் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு மாற்றுவழி சாலை திருவாரூர் சாலையோர சிக்னல் இயங்க செய்தல் வேண்டும், திருவாரூர் கலை, கல்லூரி அருகேயுள்ள பாலத்தில் வேகதடை அமைத்து தர கோருதல்சின்னகாண்டு அருகில் சாலை ஓர கடைகள் விபத்து தடுத்தல் மன்னார்குடி-திருவாரூர் இடையே சாலையில் 58 வளைவுகளை மாற்றி அமைக்கப்படவேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள சாலையினை அகலப்படுத்துதல் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)துறை அமைச்சர் தெரிவித்தார் இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் பொதுமக்களிடம் தெரிவித்தார்

பொதுப்பணிகள் (கட்டிடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரையில் தேசிய நெடுஞ்சாலை, இந்திய தேசிய நெடுஞ்சாலைமாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகள் என இந்த வகைப்பாட்டிலே 1384 கிலோமீட்டர் சாலைகள் தமிழக அரசின் சார்பாக பராமரிக்கப்பட்டுவருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 2021-2022ல் தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசு பொறுப்பேற்றதிலிருந்து 123 கிலோமீட்டர் 73 சாலை பணிகளை 128 கோடி திட்ட மதிப்பீட்டிலும், 2022-2023ல் 71 கி.மீ சாலை பணிகளை.90 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊராட்சி ஒன்றிய சாலைகள் 2022-23ல் 10 ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலைகள் சீரமைப்பு பணிகள் 52 கோடி செலவிலும்பாலங்கள் பொறுத்தவரையில் நபார்டு நிதியுடன் .24.50 கோடி மதிப்பீட்டில் 11 பால பணிகள் 2021-2022 நிதியாண்டில் தொடங்கப்பட்டு தற்போது 7 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது ஏனைய பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2022-2023 நிதியாண்டில் .4.30 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளுக்கு எடுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதுநீண்ட நாள் மக்களின் கோரிக்கையான நீடாமங்கலம் ரயில்வே பாலம் கட்டுவதே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெல்லி செல்கின்ற போதெல்லம்பாரத பிரதமரிடம் நிதியமைச்சரிடம் கோரிக்கையினை வலியுறுத்தியதன் அடிப்படையில் அதற்கான பணிகள் இந்தாண்டே 170 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோராப்பட்டு தற்போது பணிகள் தொடங்கவுள்ளது திருவாரூர்மன்னார்குடி சாலை சிங்காளஞ்சேரியிலிருந்து இரயில்வே கடவு .29.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது, மயிலாடுதுறை-திருவாரூர் சாலை பேரளம் பகுதியில் நிலங்கள் ஒதுக்கப்பட்டு ரூ.39 கோடி மதிப்பீட்டில் ரயில்வே பாலம் அமைக்க பணிகள் நடைபெறவுள்ளது

சென்னை கன்னியாகுமரி வழிதடம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர்-மன்னார்குடி, கும்பகோணம்-மன்னார்குடி, மயிலாடுதுறை-திருவாரூர் ஆகிய 3 சாலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் நடைபெற்றுவருகிறது. சம்மபந்தப்பட்ட ஒப்பந்தர்களிடம் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்படுடுகிறது. நாகப்பட்டினம்-தஞ்சாவூர்சாலை 67 கிலோமீட்டர் நகாய் மூலமாக 283 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுவருகிறது.

பணிகளை முடித்திட ஆய்வு கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுவருகிறது. தேசிய நெடுஞ்சாலை 67, ஏற்கனவே சாலையில் இருந்து தற்போது மாநில அரசின் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 42 கிலோமீட்டர் தூரம் கைவிடப்பட்ட பகுதி என்ற அடிப்படையில் அப்பகுதி 114 கோடி பணிகள் நடைபெற்றுவருகிறது
சில பகுதிகளில் சாலை பணிகள் தோய்வாக இருப்பதை கண்காணித்து விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்டநாள் கோரிக்கையான திருத்துறைப்பூண்டி புற வழிச்சாலை பணிகள்.25.50 கோடி மதிப்பிட்டில் 2.50 கிலோமீட்டர் பணிகள் முதற்கட்டமாக நடைபெற்றுவருகிறது.

அதில் 19 சிறுபாலங்களுக்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது திருவாரூர்மன்னார்குடி மற்றும் வலங்கைமான் ஆகிய நகரங்களுக்கு புறவழிசாலை பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. நில எடுப்பு பணிகள் முடிந்தவுடன் புறவழிசாலை பணிகள் நடைபெறும் திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் இரண்டாம் கட்டமாக நன்னிலம் நகரங்களுக்கு விரைவான திட்ட அறிக்கை தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலுடன் பணிகள் நடைபெறும்.
ஆய்வுக்கூட்டத்தின் நோக்கமானது தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைப்பதே தமிழக முதலமைச்சரின் ஆணையாகும்.

இவ்வாணையினையேற்று 13 மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பெற்று, தற்போது 14 மாவட்டமாக மே 16ஆம் தேதி கூட்டம் மேற்கொண்டுள்ளோம் இம்மாவட்டத்தில் விபத்துக்களை குறைப்பது குறித்து பல்வேறு பொது நல அமைப்புகள் தன்னார்வ சங்கள்பள்ளி தலைமையாசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் சார்ந்த பிரநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து திட்ட அறிக்கையாக தயார்செய்து விபத்து குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு என தெரிவித்தார்


அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “சகோ” என்ற விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது, இக்கையேடு பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது என பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)துறை அமைச்சர் தெரிவித்தார்
இக்கூட்டத்தில்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தெரிவித்ததாவது
திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளை கொண்டு சேர்த்திடவும் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கிடவும் அடுத்தகட்டத்திற்கு மக்களை கொண்டு செல்லவும் தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டினை அறிவித்து விவசாயத்தினை முன்னிறித்தி வருகிறார்கள் திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட விவசாய பொருட்கள் உற்பத்தி மேம்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மன்னார்குடி அருகே மேலநாகை கிராமத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளி பூங்கா ஆரம்பிக்கப்படும் என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

நிகழ்வில் தலைமைப்பொறியாளர் (நெ)கட்டுமானம் (ம) பராமரிப்பு சந்திரசேகர்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்) செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி) கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை இளம்வழுதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள்உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *