திருவண்ணாமலை கீரனூரில் அமைந்துள்ள எஸ் கே வி பன்னாட்டு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்கத்தின் துணை தலைவர் மற்றும் பள்ளியின் தலைவர் மண்ணுலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் .
ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் இந்திரராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள் வட்டார கல்வி அலுவலர் கண்ணன் அவர்களும், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் முதல்வர் வடிவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் அனைவரும் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியின் போது பள்ளியினுடைய தாளாளர் திருநாவுக்கரசு மற்றும் பள்ளியின் பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர். அப்துல் கலாமை நினைவு கூறும் வகையில் மாணவருடைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் எழிலரசி செய்திருந்தார். ஆசிரியை அல்போன்சா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.