வலங்கைமான் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு-வெள்ளாளர் தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீ பிடாரியம்மன் (எ) குளுந்தாளம்மன் கோயிலில் கடந்த 9-ந்தேதி காலையில் கணபதி ஹோமத்தோடு
சித்திரை திருவிழா துவங்கியது.

அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று அன்று மாலை காப்பு கட்டி, இரவுஅம்மன் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. இதேபோல் தினசரி அபிஷேக ஆராதனைகள் மாலை அம்மன் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. கடந்த 16-ந்தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சித்திரை திருவிழா தேரோட்டம் துவங்கி இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
18-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை வெள்ளாளர் தெரு, கள்ளர் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, வரதர்குளத்தெரு வாசிகள் வாணவேடிக்கை யுடன்
செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *