கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் உள்ள அன்பாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு காலை உணவு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட மாநில மாவட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல கரூர் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் திமுக அமைப்பு சாரா அணியின் மாநகர துணை செயலாளர் அறிவழகன் தலைமையில் 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும்,500- நபர்களுக்கு பிரியாணியும், 200 மரக்கன்றுகள் மற்றும் 500 லட்டுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதே போல கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு திமுக மாணவரணி சார்பில் ஆதி சரவணா மூர்த்தி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கரூர் மத்திய பகுதி திமுக சார்பில் கனகராஜ் தலைமையில் பிரியாணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாக்களை சிறப்பித்தனர்