பரவனாற்றில் மழை காலங்களில் மழை நீருடன், நெய்வேலி சுரங்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு, ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள், பாதிப்பு, அடைகின்றன.
தமிழகவேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தியாகவல்லி பகுதியில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அருவாள்மூக்கு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (சர்க்கரைத் துறை) அன்பழகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,ஆகியோர் முன்னிலையில் தியாகவல்லி பகுதியில் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகளாக ரூ.81.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அருவாள்மூக்கு திட்டப் பணிகளை இன்று (30.11.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.