குலத்தொழிலைத்‌ திணிக்கும்‌ மத்திய பா.ஐ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயண திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாநில் திக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் குப்புசாமி வரவேற்றார்.
புதுச்சேரி மாவட்டத்‌ தலைவர்‌அன்பரசன்‌ மாவட்டக்‌ காப்பாளர். அறிவழகன்‌ மாவட்டச்‌ செயலாளர்‌ சடகோபன்‌ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுசெயலாளர் துரை சந்திரசேகரன் தொடக்கவுரை யாற்றினார். புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மார்க் கேஸ் கம்யூனிஸ்ட் செயலாளர் ராஜாங்கம் திமுக எம்எல்ஏ செந்தில்குமார் மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பொதுச் செயலாளர் சங்கர் அதிமுக பொறுப்பு குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம் மற்றும் திராவிட கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்/ பொதுக்கூட்டத்தில் பீக்காத்தலைவர் கி வீரமணி பேசியதாவது: மத்தியில் மக்கள் விரோத ஆர் எஸ் எஸ் பாஜக மோடி அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது அவர்கள் எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதை செய்யாமல் சொல்லாததை எல்லாம் செய்து வருகிறார்கள் வருமான வரித்துறை சிபிஐ அமலாக்கத்துறை என மூன்றையும் திரிசூலம் போல் வைத்து ஆட்சியை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட விவாகாரத்தில் பெண் ஆளுநர் அதை பற்றி தெரியாது என்கின்றார். பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பாஜகவில் இருந்து நடிகை ஒருவர் விலகி இருக்கிறார். பாஜகவில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது இதைவிட உதாரணமாக என்ன இருக்கிறது.
அம்மை கிருமி ஊசியை கொண்டு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடுவார்கள் அதுபோல்தான் சாதிய ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போல் இல்லை வரவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. ஏற்கெனவே ஏற்கனவே தென்னிந்தியாவில் பாஜகவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது.
புதுச்சேரியில் ஒப்புக்கு தான் ஆட்சி நடக்கிறது கயிறு வேறொரு இடத்தில் இருக்கிறது பொம்மலாட்டம் போல் இங்கு உள்ள முதல்வர் இருக்கிறார் .இங்கு யார் உண்மையாக ஆள்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் நடப்பது பாலிடிக்ஸ் ஆனால் புதுச்சேரியில் நடப்பது பொலிட்டிக்ஸ் இவ்வாறு அவர் பேசினார்
வடக்கு மாட்டதலைவர் கிருஷ்ணசாமி நன்னிகூறினார். ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்ட திராவிடர்கழகத்தினர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *