புதுச்சேரி.அக்.27-புதுவையில் என் மண், என் தேசம் இயக்கம் 3 நிகழ்வாக நடந்தது.முதல் நிகழ்வாக கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை 108 கிராம பஞ்சாயத்து அளவிலும், 2-ஆம் கட்டமாக ஆகஸ்டு 16 முதல் 20-ஆம் தேதி வரை 5 நகராட்சிகள், 3 வட்டார அளவிலும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
3-வது கட்டமாக ஆகஸ்டு 18-ஆம் தேதி 108 கிராம பஞ்சாயத்துகள், 5 நகராட்சி களில் சேகரிக்கப்பட்ட புனித மண் அமிர்த கலசங்கள், மரக்கன்றுகள், செடி ஆகியவை எடுத்து வரப்பட்டு அவற்றை ஒன்றாக கலந்து அதில் மரக்கன்றுகள் நட்டு மாநில அளவில் அமிர்த பூங்கா வனம் பாரதி பூங்காவில் அமைக்கப்பட்டது. 2-ம் நிகழ்வாக இல்லம்தோறும் ஒரு பிடி மண், ஒரு பிடி அரிசி தானமாக பெறப்படும் நிகழ்ச்சி 139 கிராமத்திலும், 108 கிராம பஞ்சாயத்திலும், 5 நகராட்சியிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது.
தற்போது 3-ஆம் நிகழ்வாக மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கி ணைக்கும் நிகழ்வு நேற்று காமராஜர் மணிமண்ட பத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை 5 உறுதி மொழிகளை வாசித்தார். விழாவில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.விழாவில் சபாநாயகர் செல்வம், கலைபண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *