தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணி பற்றிய கலந்தாய்வு கூட்டம் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி வருகிற 19 12 2025 வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது
இதற்கான கவன ஈர்ப்பு பேரணி பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன் தலைமையில் மாநில பொருளாளர் ஆ. முத்து செல்வம் மாநிலத் துணைத் தலைவர் பாண்டியராஜன் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ஆர் செல்வி ஆகியோர் முன்னிலையில் சென்னை செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியம் பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களாக அரசு உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணியில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது
இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சி செயலாளர்களும் ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் இயக்குபவர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள் கணினி ஆப்பரேட்டர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டச் செயலாளர் இ. வேல்முருகன் ஒன்றிய தலைவர் பி. பாலச்சந்தர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு செய்திருந்தனர்