வில்லியனூர் திருக்காஞ்சி கங்காவரநதீஸ்வரர் கோயில் புகழ்பெற்ற ஆலயமாகும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், அல்லது மறந்தவர்கள் இக்கோயில் அருகேயுள்ள சங்கராபரணி ஆற்றில் அந்தணர்கள் மூலம் திதி கொடுத்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இக்கோயிலில் ஒவ்வோர் வாரமும் சனிக்கிழமை அன்று சங்கராபரணி ஆற்றுக்கு பூஜைகள் நடக்கிறது. அப்போது சுமங்கலிப் பெண்கள் அகல்விளக்கு தீபமேற்றி ஆற்றுநீரில் விடுவார்கள். இதனால் குடும்பமேன்மை, கணவனுக்கு உடல் ஆரோக்கியம், புத்திரசம்பத்து போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திரளான பக்தர்கள் சூழ கோயில் குருக்கள் சங்கராபரணி ஆற்றுக்கு சாம்பிராணி புகைபோட்டும், வேத மந்திரங்கள் முழங்க நமச்சிவாய மந்திரங்கள் சொல்ல, பக்தர்களும் , பக்திப்பெருக்குடன் திரும்பசொல்லி இறைவனை சேவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆற்றுக்கு சோட சோப தீபாராதனை காண்பிக்கப்பட்டு, “நமச்சிவாய வாழ்க!
நாதன்தாள் வாழ்க!”
என்று கோழமிட்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *