புதுச்சேரி மங்களம் தொகுதியில் பொதுப்பணித்துறையின் மூலம்1 கோடியே 86 லட்ச ரூபாய் செலவில் மேம்பாட்டு பணி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் மங்களம் தொகுதிக்குட்பட்ட நகர்களில் பல ஆண்டு காலமாக பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளுக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைத்துத் தர கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளுக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர கோரிக்கை வைத்தனர் கோரிக்கை ஏற்ற அமைச்சர் உடனடியாக பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு தோட்டத்தின் மூலம் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் கீழ்கண்ட பகுதிகளுக்கு வாய்க்கால் அமைக்கும் பணிகளுக்கு நடவடிக்கை மேற்கொண்டார் .

அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது கட்டுமான பணி உருவையாறு ஆச்சாரியார் கல்லூரியில் இருந்து ஓம் கணபதி நகர் வரை 47.08.000லட்சம் ரூபாய் செலவிலும் ஓம் கணபதி நகரில் இருந்து சீனிவாசா நகர் வரை 48 லட்சத்தி 34 ஆயிரம் ரூபாய் செலவிலும் திருக்காஞ்சி முதல் அபிஷேகப்பாக்கம் வரை யு வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிக்காக 45 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவிலும் பெருங்களூர் பகுதியில் மைக்கல் அமைக்கும் பணிக்காக 45 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலும் மொத்தம் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு செயற்பொறியாளர் சந்திரகுமார் உதவி பொறியாளர் கோபி இளநிலை பொறியாளர் நடராஜன் மற்றும் NR காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் ஒப்பந்ததாரர்கள் என திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *