முத்தியால்பேட்டைசிறுமி ஆர்த்தி படு கொலையால் மக்களின் நம்பிக்கையை இழந்த புதுவை அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யவேண்டும். என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் வெளியிடும் அறிக்கை.!!!.

புதுவையில் எண்ணற்ற ஆன்மீக சித்தர்களும் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் உலாவிய இந்த மண்ணில்
9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது புதுவை மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே புதுச்சேரியை ஏளனமாக பார்க்கும் நிலை வந்து விட்டது. புதுச்சேரியில் கஞ்சாவை வைத்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கஞ்சாவை ஒழிக்க அரசு எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் கொலை , கொள்ளை ஆள் கடத்தல் , கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதன் விளைவாக இன்று சிறுமி ஆர்த்தி காட்டுமிராண்டி தனமாக கொல்லப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சுற்றுலாத்தலமாக மாற்றுகின்றோம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட ரெஸ்டோபார்கள் , கலாச்சார நடனம் நடத்த அனுமதி கொடுத்து புதுவையை இந்த அரசு சீரழித்து வருகிறது. புதுவையில் கஞ்சா விற்பனை ரெஸ்ட் டோபார் அருகிலும் பள்ளி, கல்லூரி மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் விற்கப்படுகிறது.

இதனை பலமுறை எதிர்கட்சிகள், சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியும் , கட்டுப்படுத்த இந்த அரசு தவறி விட்டது. வெளி மாநில பெண் பிள்ளைகள் ரெஸ்டோ பாரில் குடித்து விட்டு அரைகுறை ஆடையுடன் ரோட்டில் திரிந்து கொண்டிருப்பது வேதனையாக உள்ளது.

உள்ளூர் மக்களையும் முகம் சுளிக்க வைக்கிறது.வெளி மாநிலத்தவர் சிலர் குடித்து விட்டு கடலில் குளிக்க செல்லும் போது அலையில் சிக்கி உயிரிழப்பு அதிகப்படியாக ஏற்பட்டு புதுவை மாநிலத்திற்கு கெட்ட பெயர் உருவாகின்றது. மேடை தோறும் பெண்ணுரிமை பற்றி பேசும் ஆட்சியாளர்கள் பெண் பிள்ளைக்கு பாதுகாப்பு கொடுக்க தவறி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் தன் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கேட்டு போராட தொடங்கி விட்டார்கள்.

தற்போது புதுவை ஒரே போராட்ட களமாக மாறியிருக்கிறது. புதுவையில் சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்களை பற்றி கவலை படாமல் பதவியையும் பணத்தையும் பாதுகாக்க ஆட்சி நடத்தும், மக்களுக்காக ஆட்சி செய்ய தகுதியற்ற புதுச்சேரி அரசை இந்திய ஜனாதிபதி அவர்கள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

மேலும் வெளியுலகம் அறியாத சிறுமி ஆர்த்திக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையுடன் படுகொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து பார பட்சமின்றி உரிய விசாரணை விரைவாக நடத்தி உண்மையான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

முதலில் 6 குற்றவாளிகள் சம்பந்தபட்டிருப்பதாக வெளிவந்த செய்தியில் 2 பேரை மட்டும் கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு நியாயமாக நடை பெற வேண்டும் என்றால் இந்த ஆர்த்தியின் படுகொலை வழக்கினை மத்திய குற்றப்புலனாய்வு துறை விசாரிக்க குடியரசு தலைவர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *