குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய மத நல்லிணக்கத்தை சிதைக்கும் செயல் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் R.L. வெங்கட்டராமன் வெளியிடும் அறிக்கை :-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியரசு மசோதா திருத்த சட்டம் மத நல்லிணக்கத்தை சிதைத்து இந்திய ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கும் செயல் ஆகும். இந்த குடியுரிமை திருத்த சட்டமானது,

இந்தியாவில் வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்சிகள், புத்திஸ்டுகள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிப்பது என்றும் , துன்பத்துக்கு ஆளாகி குடியேறி வந்த முஸ்லீம்கள் குடியுரிமை பெற உரிமை இல்லை என்று கூறுகிறது. இது வழிவழியாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களை பிளவு படுத்தி , குறிப்பிட்ட ஒரு சிறுபான்மை இன மக்கள் மீது வெறுப்பும் பகையும் உண்டாக்கி அதில் மத்திய அரசு குளிர் காய நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் , குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கி இருப்பது , மத்திய ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட பிரச்சனைகளான , வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு, வரிச்சுமை, வேலையிழப்பு, கடன் சுமை, சாதிய அடக்குமுறைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் போன்ற வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும்.

பாஜக மத்திய அரசின் வன்மமும், வெறுப்பும் நிறைந்த, மத நல்லிணக்கத்தை, நிலை குலைக்கும் குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிக்கை வெளியிட்டதை வன்மையாக கண்டிப்பதுடன், குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் , பன்முகத்தன்மை சிதைக்கும் இந்த CAA திருத்த சட்டத்தை புதுவையில் அமல் படுத்துவதை எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்.
R.L. வெங்கட்டராமன்
சேர்மன்
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம்.
புதுச்சேரி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *