திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள ஜஎன்டியுசி அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார்.

வட்டார சேவாதள தலைவர் கே.என்.ஆர்.இளஙகோவன், ஐஎன்டியுசி நகரத் தலைவர் அகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வருகை தந்த திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜித் குமார் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும்போது இளைஞர் காங்கிரஸ் செயல்கள் பற்றியும், ராகுல் காந்தி அவர்களின் கரத்தை வலுப்படுத்துவது பற்றியும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் களப்பணி ஆற்றிடவும் அதற்காக முயற்சியும், பயிற்சியும் எடுக்க வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ஜஎன்டியுசி திருவாரூர் மாவட்ட தலைவர் வலஙகை குலாம் மைதீன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மூலக்கால் விஜயகாந்த், இளைஞர் அணி யாசர், நகர இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆசிப், தொழிற்சங்க செயலாளர் இஸ்மத், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *