தேனி மாவட்டம் கம்பம் நகர மக்களின் மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்புடன் இயங்கி வரும் RJMS குழுமத்தின் ஒரு அங்கமான CINE SQUARE திரையரங்கம் எதிர்புறம் பிரம்மாண்டமான முறையில் வாகன ஓட்டிகளுக்கு இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் RJMS குழுமத்தின் இன்னொரு அங்கமாக தரமான பெட்ரோல் டீசல் விற்பனையை செவ்வாய்க்கிழமை கோல காலமாக துவங்கப்பட்டது

இந்த திறப்பு விழாவிற்கு இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப் லிமிடெட் மதுரை மண்டல மேலாளர் கே எம் சபரீஷ் தலைமை வகித்தார் எச்.பி.சி.எல். முதுநிலை திண்டுக்கல் மண்டல விற்பனை மேலாளர் ஆர்அரவிந்த் பாஸ்கர் பெட்ரோல் டீசல் முதல் விற்பனையை துவக்கி வைத்து கூறும் போது திறக்கப்பட்டுள்ள ஆர்.ஜெ.எம்.எஸ்.எக்கோ எனர்ஜி ஹப் பெட்ரோல் பங்கில் தரமான பெட்ரோல் டீசல் சரியான அளவில் வழங்கப்படும். கம்பம் நகரில் மாபெரும் நிறுவனமான RJMS குழுமத்தின் ஒரு அங்கமாக திறக்கப்படும் பெட்ரோல் பங்க் கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசதமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேனஜீங் டைரக்டர் கே ஆர் சௌந்தரராஜன் தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் மாவட்ட அறங்காவலர் கே ஆர் ஜெய பாண்டியன் பிரமலைக் கள்ளர் வடக்கு வட்ட மகாஜன சங்கத் தலைவர் ஓ ஆர் நாராயணன் மத்திய பாதுகாப்பு துறை அதிகாரி கே.ஆர்.எஸ்.ராம் ஜெயந்த் கே.ஆர்.எஸ்.ஜெயஷிவாணி உள்பட நகர பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *